ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் முளைத்த வண்ண காளான்கள்

தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் வண்ண காளான்கள் முளைத்துள்ளன.;

Update: 2021-07-20 18:06 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் முளைத்துள்ளன. 
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், “தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காளான்கள் முளைத்துள்ளன. இந்த காளான்களை உணவுக்கு பயன்படுத்த முடியாது.  மழை பெய்தால் மட்டும் இந்த கலர் காளான்கள் வளரும். வறட்சியான நேரத்தில் வளராது” என்றனர்.

மேலும் செய்திகள்