ஆலங்குடி கல்லாலங்குடி திருப்பதி நகரில் செவிட்டு முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதையொட்டி முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவில் 28 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. பின்னர் சமையல் செய்து முனீஸ்வரருக்கு படையல் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.