விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-07-20 17:34 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி பகுதியை சேர்ந்தவர் குப்பு மகன் இருளாண்டி (வயது41) தொழிலாளி. இவர் தனது மகள் பாண்டீஸ்வரியுடன் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவிலில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் அதிக குடிப்பழக்கம் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த இருளாண்டி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரின் மனைவி பாண்டியம்மாள் (46) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்