அரசு பள்ளியில் சேர வெற்றிலை பாக்கு வைத்து மாணவர்களுக்கு அழைப்பு
அரசு பள்ளியில் சேர வெற்றிலை பாக்கு வைத்து மாணவர்களுக்கு அழைப்பு
பந்தலூர்
பந்தலூர் அருகே பொன்னானி அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.
இதனால் ஆதிவாசி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்ப தற்கும், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை மீண்டும் சேர்க்கவும் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமையில் ஆசிரியர்கள் தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து குழந்தை களுக்கு மாலை அணிவித்து அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த செயல் பெற்றோரை மகிழ்வடைய செய்து உள்ளது.
இதனால் பலர் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்த்து வருகிறார்கள். இந்த பள்ளியில் இதுவரை 65 மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.