மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மதுரை, ஜூலை
மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 28 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 15 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 47 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 26 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 71 ஆயிரத்து 752 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 358 ஆக குறைந்துள்ளது. இதில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் அடங்குவர். 115 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
மதுரையில் சில தினங்களாகவே கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,140 ஆக உள்ளது.