வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை பூட்டிய கட்டிட உரிமையாளர்
வேளாங்கண்ணியில் வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை கட்டிட உரிமையாளர் பூட்டினார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் வாடகை தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை கட்டிட உரிமையாளர் பூட்டினார்.
பி.எஸ்.என்.எல்.அலுவலகம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் மேல வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது இதற்காக கட்டிட உரிமையாளரிடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் வாடகைக்கு இயங்க15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் வாடகை ஒப்பந்தம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்து விட்டது. இதனால் கட்டிடத்தின் உரிமையாளர் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாடகை கேட்டுள்ளார். ஆனால் வாடகை தரவில்லை என தெரிகிறது. வாடகை தராததால் அலுவலகத்தை காலி செய்யும் படி உரிமையாளர் கூறியுள்ளார்.
உரிமையாளர் பூட்டினார்
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களாக வாடகை தராததால் கட்டிடத்தின் உரிமையாளர் நேற்று காலை பி.எஸ்.என்.எல். அலுவலத்தை மூடி பூட்டி விட்டு சென்று விட்டார். அப்போது அங்கு பணிக்கு வந்து அலுவலர்கள் அலுவலகம் பூட்டிக்கிடந்ததை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகள், கட்டிடத்தின் உரிமையாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி , இன்னும் ஒரிரு நாட்களில் வாடகை பாங்கியை தருவதாக தெரிவித்தனர். இதற்கு கட்டிட உரிமையாளர் உடன்படவில்லை என தெரிகிறது. . வாடகை பாக்கி தராததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை கட்டிட உரிமையாளர் பூட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.