காங்கிரஸ் கட்சியினர் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டம்
மத்திய அரசின் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நாகையில் காங்கிரஸ் கட்சியினர் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நாகையில் காங்கிரஸ் கட்சியினர் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மத்திய அரசின் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மீனவர் பிரிவு மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பூபாலன் முன்னிலை வகித்தார்.இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் புதிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
புதுப்புது சட்டங்கள்
மீனவர்களுக்கு எதிராக புதுப்புது சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.மத்திய அரசு புதிப்புது சட்டங்களை அறிவித்து மீனவர்களின் கைகளை நசுக்குவதை உணர்த்தும் வகையில் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.