கோவை அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதி விசாரணை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதி விசாரணை

Update: 2021-07-20 14:54 GMT
கோவை

திருட முயன்ற போது பிடிபட்டு இறந்த வடமாநில தொழிலாளியின் உடல் வைக்கப்பட்டு உள்ள கோவை அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதி விசாரணை நடத்தினார்.

வடமாநில தொழிலாளி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சட்டேந்திர பிரசாத் (வயது 45). இவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தங்கி பணிபுரிவதற்காக கடந்த வாரம் வந்தார். 

அவர் 2 நாட்கள் மில்லில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மில்லை விட்டு வெளியேறி இரவு நேரத்தில் வேட்டைக்காரன்குட்டை பகுதியில் உள்ள மணி என்பவரின் வீட்டு சுவர் ஏறி குதித்தார்.

இதை பார்த்து மணி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சட்டேந்திர பிரசாத்தை மடக்கி பிடித்தனர்.

 அப்போது சிலர் அவரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மயங்கி விழுந்து சாவு

இதையடுத்து அவரின் கைரேகையை போலீசார் பதிவு செய்ய முயன்ற னர். அப்போது சட்டேந்திர பிரசாத் திடீரென மயங்கினார். 

உடனே போலீசார் அவரை சோமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதற்கிடை யே போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது வடமாநில தொழி லாளி இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.

நீதிபதி நேரில் விசாரணை

இந்த நிலையில் சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வைஷ்ணவி நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தார். அவர், வடமாநில தொழிலாளி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தினார். 

மேலும் செய்திகள்