தூய்மை பணிக்கு தேர்வானவர்களுக்கு வேறு பணி ஒதுக்க கூடாது

தூய்மை பணிக்கு தேர்வானவர்களுக்கு வேறு பணி ஒதுக்க கூடாது

Update: 2021-07-20 14:42 GMT
கோவை

கோவை மாநகராட்சியில் தூய்மை பணிக்கு கடந்த ஆண்டு பட்டதாரி கள் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். 

அதில் சிலருக்கு அலுவ லக பணி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டும் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் புகார் கூறப்பட் டது. 

இந்த நிலையில் தூய்மை பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டு தூய்மை பணி செய்யாதவர்களை, தூய்மை பணிக்கு அனுப்ப வலியுறுத்தி மத்திய மண்டல உதவி ஆணையாளரிடம் வெற்றிலை, பாக்கு, இனிப்புகளுடன் கூடிய தாம்பூலத் தட்டுடன் சென்று சமூக நீதி கட்சியினர் மனு அளித்தனர்.

இது குறித்து அந்த கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், தூய்மை பணிக்காக நியமனம் பெற்றவர்களைவேறு பணி ஒதுக்ககூடாது. தூய்மை பணிக்கே அனுப்ப வேண்டும். 

தூய்மைப் பணி செய்யாமலேயே பலர் சம்பளம் வாங்கி வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்