திருமணத்திற்கு மறுத்த தொழிலாளி கைது

பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 14:13 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே உள்ள ஆணைகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்காயி (வயது 32). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 

அதன் பின்னர் மாணிக்காயி கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வடமதுரையை அடுத்த எம்.களத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெருமாள் (46) என்பவருடன் மாணிக்காயிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பெருமாளுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதற்கிடையே பெருமாள், மாணிக்காயியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. 

இதில் கர்ப்பமான மாணிக்காயிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனக்கும், இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறி மாணிக்காயியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் மறுத்துள்ளார். இதுகுறித்து மாணிக்காயி வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்