பிளஸ்-2 தேர்வில் 43 ஆயிரம் பேர் தேர்ச்சி; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் முடிவுகளை வெளியிட்டார்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.;

Update: 2021-07-20 13:06 GMT
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.,

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உட்பட மொத்தம் உள்ள 360 பள்ளிகளில் 20 ஆயிரத்து 605 மாணவர்களும், 22 ஆயிரத்து 523 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 128 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியுடன் அவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பூபாலமுருகன், மலர்கொடி, பள்ளி துணை ஆய்வாளர் சவுத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்