விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
போடியில் விவசாயி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.
போடி:
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. நேற்று மாலை இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். அது 6 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் வகையை சேர்ந்தது ஆகும். பிடிபட்ட அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.