போக்சோவில் ஜோதிடர் கைது

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் ஜோதிடரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 12:05 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 35). ஜோதிடர். கடந்த 12-ந்தேதி இவர், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை எரியோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவிலூர் பிடாரியம்மன் கோவில் அருகே இருந்த கோட்டைச்சாமியையும், சிறுமியையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி கோட்டைச்சாமி கடத்தி சென்றதாக சிறுமி கூறினார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கோட்டைச்சாமியை கைது செய்தார்.  பின்னர் சிறுமியை  அவருடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்