வீரிய ஒட்டு ரக மக்காச்சோள பயிரில் கூடுதல் மகசூல்
வீரிய ஒட்டு ரக மக்காச்சோள பயிரில் கூடுதல் மகசூல்
தாராபுரம்
தாராபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொளத்துப்பாளையம், காளிபாளையம், அலங்கியம் நஞ்சையம்பாளையம், கரையூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள செடியில் விளைந்த மணிகள் அதிக அளவில் பிடித்து தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது. மேலும் வட்டமலைபுதூர், உண்டாரபட்டி, கொங்கூர், பெரிச்சிபாளையம், மணக்கடவு போன்ற கிராமங்களில் வீரிய ரக ஒட்டு ரக விதைகள் அதிக மகசூலை தந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
---