பள்ளி அங்கன்வாடி ஊழியர் பணி இடைநீக்கம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் முட்டைகள் உள்ளிட்ட சத்துணவு பொருட்கள் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நேரடி விசாரனை செய்ததில், அந்த மையத்தில் உலர் உணவுப்பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக பயனாளிகளுக்கு வழங்கியதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்படி சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி சத்துணைவு அமைப்பாளராவும், அங்கன்வாடி ஊழியருமான சந்திரவேலன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.