சென்னை கோயம்பேடு அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

சென்னை கோயம்பேடு, சின்மயா நகர், குலசேகரபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 29). தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி இரு வீட்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Update: 2021-07-20 09:46 GMT
மாணிக்கத்துக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணமான நாள் முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மாணிக்கம், வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்த மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்