நண்பனை வெட்டிய வாலிபர் கைது

சுரண்டை அருகே நண்பனை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-19 20:24 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள கழுநீர்குளம் பட்டமுடையார்புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் செல்வகனி (வயது 36). அதே பகுதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராமர் என்பவர் மகன் சக்தி (38) இருவரும் நண்பர்கள். சக்தி கடந்த சில மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மன வருத்தத்தில் இருந்த சக்தி நேற்றுமுன்தினம்  தனது நண்பர் செல்வக்கனியிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டு அடம் பிடித்துள்ளார். அப்போது சக்தி மதுபோதையில் இருந்ததால், இப்போது போய் பேச வேண்டாம் என செல்வக்கனி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்தி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வக்கனியை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வீ.கே.புதூர் சப்-இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் வழக்குப்பதிவு செய்து சக்தியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்