கட்சி பெயர் பலகையை சேதப்படுத்தியவர் கைது
திருத்தங்கலில் கட்சி பெயர் பலகையை சேதப்படுத்தியவரை ேபாலீசார் கைது செய்தனர்.;
சிவகாசி,
திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்தவர் தங்கம் (வயது 30). இவர் திருத்தங்கல் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் நகர அமைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் சத்யாநகருக்கு செல்லும் வழியில் கட்சியின் பெயர் பலகை வைத்துள்ளார். இதை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (49) என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கம் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.