மது விற்ற 2 பேர் கைது
சிவகாசியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மயிலாடுதுறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகில் முட்புதரில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது29) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் அதிவீரன்பட்டியை சேர்ந்த பெரியாண்டி என்கிற அலெக்ஸ் பாண்டி (53) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியாண்டியை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.