ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை; பொது மேலாளர் தகவல்

நெல்லையில் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மேலாளர் தெரிவித்தார்.

Update: 2021-07-19 20:01 GMT
நெல்லை:
நெல்லை ஆவின் பொது மேலாளர் நாகராஜன், கரூருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாமக்கல் சுந்தரவடிவேலு நெல்லை ஆவின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நெல்லை ஆவின் நிறுவன அலுவலகத்துக்கு வந்து பொது மேலாளராக பதவி ஏற்றுக் கொண்டர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை ஆவின் நிறுவனத்தில் தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேரடியாக 10 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில்40 ஆயிரம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. பால் கொள்முதலை 60 ஆயிரம் லிட்டராகவும், விற்பனை இலக்கை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பால் விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக நெல்லை ஆவின் நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்