வாலிபர் கைது
விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோவிலில் உண்டியலை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகரில் சொக்கநாத சுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இந்நகர் பஜார் போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து கோவில் அருகே உள்ள ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.