ஆர்ப்பாட்டம்
மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, கிருஷ்ணன்கோவில், காரியாபட்டி, ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.