புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
சிவகாசியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பெட்டி கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது பார்த்திபன் (வயது 30), முத்துப்பாண்டி (39), கருப்பசாமி (42), வேல்முருகன் (34) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் 160 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.