மீன்பிடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டிய மீனவர்கள்

விசைப்படகுகளில் மீனவர்கள்கருப்பு கொடி கட்டினர்.

Update: 2021-07-19 18:29 GMT
கோட்டைப்பட்டினம்:
மத்திய அரசு புதிதாக கொண்டுவரவுள்ள மீன்பிடி சட்டத்திற்கு தமிழக மீனவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்