மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-19 18:28 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த முத்து (வயது 57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொய்யல் புன்னம் சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையத்தில் ஒரு வீட்டில் வைத்து மது விற்று கொண்டிருந்த பெரிய ரெங்கம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (53) மற்றும் தளவாபாளையம் ஓவர்டேங்க் அருகே மது விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (60) என்பவரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் பறிதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்