திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 28,205 மாணவர்கள் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 28,205 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை
கொரோனா தொற்றின் காரணமாக பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நேரடி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் நேற்று வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 151 அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள், 93 சுயநிதி பள்ளிகள் என 244 பள்ளிகள் உள்ளன.
இதில் 13 ஆயிரத்து 363 ஆண்கள், 14 ஆயிரத்து 842 பெண்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 205 மாணவர்கள் நேரடி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவு வெளியானவுடன் மாணவர்களது செல்போன்களில் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர்.