குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் ஊராட்சி பழந்தோட்டம் பகுதியில் சுமார் 250 பேர் வசித்து வருவருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமேதகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி, தாலுகா போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.