துணை நடிகை பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது

திருவண்ணாமலை அருகே திருமணம் செய்வதாக கூறி துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-19 18:10 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே திருமணம் செய்வதாக கூறி துணை நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

துணை நடிகை 

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், திரைக்கு இன்னும் வராத ஒரு படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உடல் நல குறைபாடு ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து துணை நடிகை அவரது தோழி ஒருவருடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

பின்னர் அவரது தோழி, துணை நடிகையை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவரான திருவண்ணாமலை இனாம்காரியந்தல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (27) என்பவர், துணை நடிகையுடன் பேச்சு கொடுத்து செல்போன் எண்ைண வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர். 

பாலியல் பலாத்காரம்

பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து பிரபாகரன், துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பிறகு திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து துணை நடிகை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்