கூடலூர்,
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயலில் உள்ள மில்லிகுன்னு ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மாறன்(வயது 45). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று தூக்குப்போட்டு மாறன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.