அரசு விதிமுறையை மீறிய ஜவுளிக்கடைக்கு சீல்

அரசு விதிமுறையை மீறிய ஜவுளிக்கடைக்கு சீல்.

Update: 2021-07-19 17:44 GMT
ஊட்டி,

ஊட்டி மெயின் பஜாரில் உள்ள கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார அலுவலர்(பொறுப்பு) ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது ஒரு ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததோடு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பதாகைகள் அங்கு ஒட்டப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்து கடை வியாபாரியிடம் கேட்டபோது, நகராட்சி சுகாதார அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதித்தும், அதனை செலுத்த மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அரசு விதிமுறைகளை மீறியதாக ஜவுளிக்கடையை மூடி ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்