படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-19 17:27 GMT
கடலூர், 

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா தங்களுடைய நலன்களுக்கு எதிராக இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 
மசோதாவில், மீனவர்கள் இந்த வகையான மீன்களைத்தான் பிடிக்க வேண்டும். இந்த பகுதியில்தான் மீன்கள் பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வலையை பயன்படுத்தித்தான் மீன் பிடிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் அரசிடம் உரிமங்கள் வாங்க வேண்டும். அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பன போன்ற விதிகள் பாரம்பரிய மீன்பிடி தொழிலை பாதிக்கும் விதத்தில் இருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

கருப்புக்கொடி கட்டி...

இந்த நிலையில் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் துறைமுகத்தில் விசைப்படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 
மேலும் விசைப்படகுகளை பயன்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் நேற்று துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் செய்திகள்