மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரும்பாறை அருகே மணலூர் ஊராட்சியில் மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.;
திண்டுக்கல் :
பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் வீடு, வீடாக சென்று மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர்.