சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது
சாத்தான்குளம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்;
சாத்தான்குளம்:
தட்டார்மடம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது முதலூர் கல்லறை தோட்டத்தில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கராஜ் மகன் ஜஸ்டினை (வயது 31) போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து 5 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.150ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜஸ்டினை கைது செய்தனர்.