மேட்டூரில் போலீசார் பிடிக்க முயன்றபோது கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி
மேட்டூரில் போலீசார் பிடிக்க முயன்றபோது கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
மேட்டூரில் போலீசார் பிடிக்க முயன்றபோது கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி
சேலம் மாவட்டம் மேட்டூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 43). ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. கடந்த ஆண்டு கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில், குற்றவாளியான இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் ராமமூர்த்தி மேட்டூரில் உள்ள அவருடைய வீட்டில் இருப்பதாக மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீசார் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர்.
தற்கொலை முயற்சி
பின்னர் அவரை பிடிக்க முயன்றபோது, ராமமூர்த்தி வீட்டில் இருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேட்டூர் போலீசார் அவர் மீது, தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.
பரபரப்பு
போலீசார் பிடிக்க முயன்றபோது ரவுடி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ராமமூர்த்தியை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் கத்தியால் கை விரலை அறுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.