புதிதாக 128 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
128 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 113 பேருக்கு பரிசோதனை செய்ததில் 143 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 91 ஆயிரத்து 944 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 216 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 89 ஆயிரத்து 105 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 220 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒருவர் பலி
இதற்கிடையில் ஈரோட்டை சேர்ந்த 46 வயது ஆண் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந்தேதி அவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்தது.