இரு தரப்பினர் மோதல்; 18 பேர் மீது வழக்கு

பரப்பாடி அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-07-18 20:25 GMT
இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள பெரியநாடார்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சாமி நாடார் மகன்கள் ராஜநாராயணன், முருகன். இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் முருகன், பாப்பா செல்வம் ஆகிய 2 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், ராஜநாராயணன், அவருடைய மனைவி சிவசக்தி, சரஸ்வதி, பாப்பா செல்வம், ராஜேசுவரி, இந்திரா, தங்கம், செல்வகுமார், பார்வதி, முத்துகிருஷ்ணன், தமிழ்செல்வன் ஆகிய 11 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகன், அவருடைய மனைவி ஜெயலட்சுமி, காமராஜ், முத்து துரை, இசக்கியம்மாள், சுகநித்தியா, இந்திரா ஆகிய 7 பேர் மீதும் வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்