கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-07-18 19:59 GMT
மதுரை
மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் தங்கராஜ் சாலையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கரும்பாலை பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(வயது 32), விக்னேஷ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல், கூடல்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒத்தவீடு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்(21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதவிர தெப்பகுளம் போலீசார் ரோந்து சென்றபோது காமராஜர் சாலை பகுதியில் சீனிவாசன் என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலூர் அருகே கீழவளவு சக்கரை மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அமீர்கான்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை கீழவளவு போலீசார் பறிமுதல் செய்தனர்

மேலும் செய்திகள்