அணில்களுக்காக இருசக்கர வாகனத்தை விட்டு கொடுத்த மருத்துவர்

அணில்களுக்காக இருசக்கர வாகனத்தை விட்டு கொடுத்த மருத்துவர்

Update: 2021-07-18 19:58 GMT
மதுரை
மதுரை ஆனையூர் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர் மெரில்ராஜ். அரசு கால்நடை மருத்துவர். தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதற்கிடையே, மோட்டார் சைக்கிளின் பின் பகுதி இருக்கைக்குள் அடிக்கடி ஒரு அணில் வந்து சென்றுள்ளது. இதனை கவனித்த மெரில்ராஜ், இருசக்கர வாகனத்தை பார்த்தபோது அதில் அணில் ஒன்று கூடு கட்டி அதில் 3 குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மெரில்ராஜ், கடந்த ஒரு மாத காலமாக அதனை உபயோகபடுத்தாமல் மாற்று வாகனத்தை பயன்படுத்தி தனது அன்றாட பணிகளை செய்து வருகிறார். அணில்களுக்காக அதனை அப்படியே வைத்திருக்கிறார். அணில் குட்டிகளுக்காக தனது வாகனத்தை பயன்படுத்தாத மருத்துவரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மெரில் ராஜ் கூறுகையில், மனிதர்களிடம் மனிதாபிமானம் காட்டுவதுபோல் விலங்குகள், பறவைகளிடமும் மனிதாபிமானம் காட்ட வேண்டும். இந்த அணில் குட்டிகளை மோட்டார் சைக்கிளில் இருந்து வெளியே விட்டும், அவைகள் அந்த வாகனத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்து உள்ளது. அதனால் அதனை அப்படியே விட்டுவிட்டு அந்த அணில்களுக்கு உணவு கொடுத்து வளர்க்க தொடங்கிவிட்டோம் என்றார்.

மேலும் செய்திகள்