ரெயில் மோதி பள்ளி மாணவர் பலி
பணகுடி அருகே ரெயில் மோதி பள்ளி மாணவர் பலியானார்.;
பணகுடி:
பணகுடியை அடுத்த துரை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜகணேஷ் மகன் விவேக் (வயது 17). 12-ம் வகுப்பு மாணவர். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் ஊருக்கு அருகே உள்ள ரெயில்வே ரோட்டை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் விவேக் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விவேக் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.