வடமதுரை அருகே மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

வடமதுரை அருகே மாயமான இளம்பெண் காதலுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

Update: 2021-07-18 19:46 GMT
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள நொச்சிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பிரியா (வயது 19). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். 
இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரியாவை தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான இளம்பெண், புதுகளராம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான முனியப்பன் (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். 
இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்