புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்

ஆலங்குளத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-07-18 19:30 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் 5 மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே விழும் அபாயநிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆலங்குளம் மின்வாரியத்தினர் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்