மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து சாவு
மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.;
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள கூழையன் விடுதியைச் சேர்ந்தவர் ராமையா (வயது 65). இவர், தான் வளர்த்து வரும் ஆட்டிற்கு இலை பறிக்க வீட்டருகே உள்ள மரத்தில் ஏறினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட ராமையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.