ரூ.5 லட்சத்தில் புதிய மின்மாற்றி
காரியாபட்டியில் ரூ.5 லட்சத்தில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. நகர், எழில் நகர், ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் இல்லாததால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றப்படி மின்வினியோகம் வழங்க முடியாத நிலை இருந்தது. மேலும் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியின் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. நகர் பகுதிகளில் தொடர்ந்து மின் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த மின் தடையை போக்க இந்த பகுதியில் கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சார வாரிய அதிகாரிகளை அழைத்து காரியாபட்டி பாண்டியன் நகர் பகுதிகளில் கூடுதல் மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் காரியாபட்டி, கள்ளிக்குடி சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பில் உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். இதில் விருதுநகர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி மின் பொறியாளர் பாலசுப்பிரமணியன், காரியாபட்டி நகர செயலாளர் செந்தில் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், காரியாபட்டி யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன், குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரியாபட்டியில் ரூ.5 லட்சத்தில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.