பேரையூர்
சாப்டூர் போலீசார் செம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (வயது 40), தெய்வேந்திரன் (41), ஆனந்தராஜன் (54), குடிசேரியை சேர்ந்த முத்துப்பாண்டி (57) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.605-ஐ பறிமுதல் செய்தனர்.