குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.
ஊட்டச்சத்து உணவுகள்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த மே 1-ந்தேதி முதல் தற்போது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 964 குழந்தைகளில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 558 குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிறுதானிய சத்துமாவு, பேரிச்சம்பழம், தேன், சிவப்பு கொண்டைகடலை, பாதம், பிஸ்தா, முந்திரி ஆகியவைகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை வழங்கி, தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கம் தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.