கடலில் மூழ்கி பட்டதாரி வாலிபர் சாவு

வேளாங்கண்ணியில் திண்டுக்கல்லை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2021-07-18 17:41 GMT
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் திண்டுக்கல்லை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
பட்டதாரி வாலிபர்
திண்டுக்கல் மாவட்டம் வினோபாஜி நத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சகாயமுத்து. இவருடைய மகன் கார்த்திக் (வயது21).இவர் பி.காம். படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவரது சகோதரர் தாமோதரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நண்பர்கள் டேவிட், சூரியா, விஜய், விக்கி, தாமஸ், ஐயப்பன் ஆகிய 8 பேர் நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். 
கடலில் மூழ்கி சாவு
பின்னர் அவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென வந்த பேரலையில் கார்த்திக் சிக்கி மூழ்கினார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து புகாரின் பேரில் வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்