வேலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை

5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வருகை

Update: 2021-07-18 17:17 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நிரந்தர தடுப்பூசி முகாம் மற்றும் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 17-ந் தேதி 14 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவற்றில் குறைந்தளவு தடுப்பூசிகளே கையிருப்பில் காணப்பட்டன. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 5 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. நிரந்தர தடுப்பூசி முகாம் மற்றும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது டோஸ் போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்