திருக்கோவிலூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே தண்டரை பகுதியில் உள்ள கட்டிடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 200 லிட்டர் சாராயம், காய்ச்சுவதற்காக வைத்திருந்த 200 லிட்டர் ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.