கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆணைப்படியும், தொழிலாளர் ஆணையரின் அறிவுறுத்தலின்படியும் தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர் முறை சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்க 1800 4252 650 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக மேற்கண்ட தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.