விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடியில் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2021-07-18 12:46 GMT
தூத்துக்குடி:

தூத்துக்குடி 3-செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 24). எலக்ட்ரீசியனான இவர் சம்பவத்தன்று அமுதாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்கு உள்ள வேகத்தடையில் சென்ற போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்